பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது 2 அடி உயர சிலை தயாரிப்பு பணிகளில் ராஜஸ்தான் கைவினைக்கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் தங்கள் வியாபாரம் அமோகமாக நடைபெறுவதாகவும், தேவரின் சிலையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.