திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 724ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நாளான வரும் 1ம் தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. Sektavudu Dargaமுன்னதாக, சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியில் இருந்து புனித கொடியை சிறப்பு வழிப்பாடு, பிரார்த்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூப்பல்லக்கு ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றது. பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது. சிறப்பு துஆ ஓதி சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.