தஞ்சாவூரில் 100 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சாவூர் நகரில் உள்ள 12 முருகன் மற்றும் விநாயகர் கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. நான்கு ராஜவீதிகளில் வலம் வந்த சுவாமிகளை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.