சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் நெருங்கிய ஆண் உறவினர்கள் மீது பெண்கள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி விளையாடி மகிழ்ந்தனர். மஞ்சள் நீராட்டு விழாவை ஒட்டி அம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் நீரை பெண்கள், முறை பையன் மீதும் ஊற்றி விழாவை கொண்டாடினர்.