விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரம் பகுதியில் சங்கர் கெமிக்கல் என்ற நிறுவனத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் ஒருவர், மேற்கூரை உடைந்ததில் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதனிடையே உயிரிழந்த நபர் தென்காசியை சேர்ந்த முத்து மாரியப்பன் என்பதும், அவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.