புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த விவேகானந்தன் என்பவர், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.