ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 2 டன் அளவிலான பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூச்சொரிதல் விழாவிற்காக பக்தர்கள், மல்லிகை, ரோஜா, தாமரை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை ஏந்தி மேள தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.