நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ரஜதகிரீஸ்வரர் சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கிய சம்பவம் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருந்தது. யாகசாலை பூகைக்கு, பட்டுபுடவை, பூ- பழம் தேங்காய் என 16 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் வந்தவர்களை, கோவில் நிர்வாகிகள் வரவேற்று மரியாதை செலுத்தினர்.