சென்னை தண்டையார்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு முஸ்லீம்கள் சிலர் பூஜை செய்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினர். தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு அங்குள்ள ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து, விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காசிமேடு கடற்கரையில் கரைக்கப்பட்டது.