சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பிரபல உணவகம் கெட்டுப்போன மஸ்ரூம் கிரேவி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அன்னை சாந்தி உணவகத்தில், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விஷ்ணு என்பவர், zomato மூலம் மஸ்ரூம் கிரேவி வீட்டிற்கு ஆர்டர் செய்து, அதனைவீட்டில் சாப்பிடுவதற்காக அதனை பிரித்த பார்த்த போது துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.