சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த முருகப்பா ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்தன. RSPB-ரயில்வேஸ் அணி, ஒடிசா ஹாக்கி சங்கம் அணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி, இந்திய ராணுவம் ரெட் அணி ஆகியவை அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.