சென்னையில் நடைபெற்று வரும் முருகப்பா கோப்பை ஹாக்கித் தொடரில், அபாரமாக விளையாடிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி, சென்ட்ரல் செகரட்டரியேட் அணியை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது நாளில் மொத்தமாக 3 போட்டிகள் நடைபெற்றன. ஒடிசாவின் ஹாக்கி சங்கம் அணியும், NCOE போபால் அணியும் மோதிய ஆட்டத்தில், ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம்-சிவப்பு அணியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி டிராவில் முடிந்தது.