காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, பச்சை பட்டாடை உடுத்தி, வண்ண மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த வெள்ளித் தேரை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இழுத்தனர்.