திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் திருடிய ஆந்திராவை சேர்ந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள உண்டியல்களில் துணிப்பை வைத்து அதன் மூலம் காணிக்கையை திருடி வந்த ஜேம்ஸ் சாமுவேல் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.