திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக 98 லட்சத்து 68ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், தங்கம் 113 கிராமும், வெள்ளி 9 கிலோவும் கிடைக்கப்பெற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.