திருத்தணி முருகன் கோயிலில், 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு, இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வாகனங்களில் மலைக் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரூ.100 மற்றும் பொது தரிசன வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாட வீதியை சுற்றி நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர்.