திருத்தணி முருகன் கோவிலில் மாசிப் பெருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில், வெள்ளி நாக வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்தார். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்கம், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.