முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அனுமதி கோரும் மனு மீது வரும் 12 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பு சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.