Also Watch
Read this
By: Web Team

இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் மாநாட்டு திடலில், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு தரிசனம் செய்து வருகின்றனர். இன்று நடைபெறும் பிரமாண்டமான மாநாட்டில் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved