நாட்டில் வயதானவர்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கவலை தெரிவித்துள்ளது. தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.