நெல்லை அருகே பஞ்சாயத்து தலைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011 ஆம் ஆண்டு 9 பேர் கொண்ட கும்பல் தாழையூத்து பஞ்சாயத்து தலைவியாக இருந்த கிருஷ்ணவேணியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற நிலையில், கிருஷ்ணவேணி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.