Also Watch
Read this
குறும்பனை நடுக்கடலில் 8 மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.. கச்சா முச்சா வலையை பயன்படுத்தியதாக கூறி தாக்குதல்
பைபர் படகுகளில் வந்து தாக்குதல்
Updated: Sep 23, 2024 10:00 AM
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை நடுக்கடலில் கச்சா முச்சா வலையை பயன்படுத்தியதாக 8 மீனவர்களை ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்த 8 மீனவர்கள் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது 5 பைபர் படகுகளில் வந்த 30க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களால் மீனவர்களை தாக்கியதுடன், மீனவர்களின் வலை ஜிபிஎஸ் கருவி மற்றும் செல்போன்களை பறித்து கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved