நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருடைய மகன் அடுத்த டார்கெட் நான் தான் என வீடியோ வெளியிட்ட நிலையில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், அவருடைய வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.