சிவகங்கை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மானாமதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட வாய்த்தகராறால், உளுத்திமடை கிராமத்தை சேர்ந்த கண்ணன், என்பவரை அரியசாமி கத்தியால் குத்தி கொலை செய்தான்.