தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் முனியப்பன் கோயிலுக்கு 151 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, உணவு சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் பல மருத்துவமனைகளுக்கு சென்றும் குணமாகாததால், முனியப்பன் கோயிலில் வேண்டிக் கொண்டார். அதன் பிறகு பூரண குணமடைந்த நிலையில், வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.