நகராட்சி குப்பைகள் : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், வீடுகள் உணவகங்கள் மண்டபங்கள் இறைச்சி கடைகள் மற்றும் சலூன் கடைகள் என பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவு பொருள் மற்றும் குப்பைகளை சேலம் ரவுண்டானா மேம்பாலம் அருகில் சாலை ஓரம் கொட்டப்பட்டு வருகின்றன.மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகத்தினர் தீ வைத்து கொளுத்துள்ளனர் கொளுத்தப்பட்ட குப்பையால் அதிகளவு புகை வெளியேறி தேசிய நெடுஞ்சாலைகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலையை கரும்புகை சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது இவ்வழியாக வாகனங்களை இயக்கிச் செல்லும்போது கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகிஉள்ளதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டிய ஓட்டுனர்கள். Related Link பக்கத்துவீட்டு சண்டையை தடுக்கச் சென்ற தந்தை, மகன்