திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குப்பைகள் சாலையோரம் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுமார் 4 டன் அளவுக்கு குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் எரிக்கப்படுகிறது. இதனால் கங்கன் தொட்டி, பாலகிருஷ்ணாபுரம், மேட்டு காலனி, வெட்டு காலனி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிப்காட் வளாகத்தில் உள்ள நவீன குப்பை எரியூட்டும் இயந்திரத்தை முறையாக பயன்படுத்தாமல் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.