கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பியதும், சாலையில் வாகனங்களை நிறுத்தி பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.