சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள உரிம கட்டணம், மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ள நிலையில், அதிகாரிகள் முன்கூட்டியே செலுத்த கூறுவதாக வணிகர்கள் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனு அளித்தனர்.