கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி கட்டாத தொழிலதிபர் வீட்டின் முன்பு நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சோமேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த தொழில் அதிபர் சத்தியமூர்த்தி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி கட்டாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜேசிபி வாகனத்துடன் வீட்டின் முன்பு நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் சத்தியமூர்த்தி எந்த பதிலும் அளிக்காததால் வீட்டின் முன் கழிவு நீர் கால்வாய் மூடி இருந்த சிமெண்ட் சிலாப்பை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.