திருக்கோவிலூரில் நகராட்சி ஊழியர் எனக் கூறிக்கொண்டு கொசுவலை அடிப்பதற்கு தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணலூர்பேட்டையை சேர்ந்த தங்கமணி என்பவர், சந்தைப்பேட்டை விஏஓ நகர் பகுதியில் கொசுவலை அடிப்பதற்கு 200 ரூபாய் பணம் வாங்கும்போது பொதுமக்களிடம் பிடிபட்டார்.