கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை மாநகராட்சி நிர்வாகமே அங்கன்வாடிக்குள் விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி நிர்வாகமே பம்பு செட் மூலம் அங்கன்வாடிக்குள் விடுவதாகவும், இதனால் குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.