திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் மாநகராட்சி குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சீரமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டும் போது, அந்த வழியாக சென்ற லாரி மின்கம்பத்தில் உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டது.