சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே மாநகர பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கல் எறிந்து உடைத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற தடம் எண் C 56 C மாநகர பேருந்து புதுவண்ணாரப்பேட்டை லஷ்மி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது 17 வயது சிறுவன் ஒருவர் கல் எறிந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடினர். உடனடியாக ஓட்டுநர் கார்த்திக் பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி ஓடி பொதுமக்களின் உதவியுடன் சிறுவனை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.