தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே மது போதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றதாக மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவனத் தலைவரை போலீசார் கைது செய்தனர். கெச்சிலாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் மள்ளர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.