கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில்,அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.