சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். பெண்கள் கும்மி அடித்து, பாட்டுப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.