திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ராமக்காபேட்டையில் அமைந்திருக்கும் இத்திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலில் வழிபாடு நடத்தினர்.