ராமநாதபுரம் மாவட்டம் அரியகுடியில் உள்ள ஸ்ரீதம்புராட்டியம்மன் கோயிலில், மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி, கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களது வீடுகளில் மண் சட்டியில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியினை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்து. மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கும்மி பாட்டு பாடி பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.