தேர்தல் நெருங்கிவிட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பது போல் செந்தில் பாலாஜி நடிப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது தொடர்பாக தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட மாணிக்க வாசகம் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் மணல் கொள்ளை அதிரித்து வருவதாக கூறினார்.