திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அமராவதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.