சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்ன கல்வராயன் மலை தொடர்ச்சி ஆலடிபட்டு மலை கிராமத்தில் அரசு பழங்குடி உண்டு உறைவிட நடுநிலை பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல இந்த சாலையையே பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.