மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.