தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் வீட்டின் முன்பு மூலிகை செடிகள் நடுவே வளர்க்கப்பட்ட எட்டு அடி உயர கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த அன்புராஜ், தனது வீட்டின் முன்பு பல மூலிகை செடிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் கட்டட வேலைக்கு சென்ற சிலர், அவரின் வீட்டின் முன்பு கஞ்சா செடி வளர்ந்திருப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்த நிலையில், மலை வேம்பு செடி என நினைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்ததாக அன்புராஜ் கூறியுள்ளார்.