கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சாலையில் அரசு பேருந்து ஒன்று கதவு சேதமடைந்து தொங்கியபடி சென்ற விவகாரத்தில் தொழில்நுட்ப ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அரசு பேருந்து ஆபத்தான வகையில் சென்றதை அவ்வழியாக சென்ற நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில், பேருந்தின் கதவு கழன்று பணிமனைக்குள் சரி செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் ஓட்டுநர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அரசு பேருந்து தொழில்நுட்ப ஊழியர் வேல்முருகன் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.