திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் மதுபோதையில் காரை இயக்கி கோயிலுக்கு வந்தவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற போதை ஆசாமியை விரட்டி சென்று பிடித்து வாகன ஓட்டிகள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருமுருகன்பூண்டியை சேர்ந்த ராஜேந்திரன் போதையில் காரை இயக்கி சிக்கியது தெரியவந்துள்ளது.