ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிக்கள்ளி வனப்பகுதி சாலையோரத்தில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ வெளியான நிலையில், அவ்வழியாக செல்பவர்கள் எச்சரிக்கையாக பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.