மதுரை மாவட்டம் வைகை தென்கரை சாலையில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வைகை தென்கரை பகுதியில் அதிகளவில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி வெட்டப்பட்ட இறைச்சி கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்கு பதிலாக, சாலையோரம் கொட்டப்பட்டு உள்ளன.