ஈரோட்டில், சித்தோடு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, உயர் ரக பைக்கில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை பொருத்திக் கொண்டு வீலிங் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. சாலையை ஆக்கிரமித்தபடி வீலிங் செய்யும் இளைஞர்களால், வாகன ஓட்டிகள் அச்சமடைவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோட்டில், சமீப காலமாக இளைஞர்கள் சிலர், கூட்டாக இணைந்து மாவட்டத்தின் பிரதான சாலைகளில், தங்களது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும்படி வீலிங் செய்து, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான சித்தோடு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இளைஞர்கள் இவ்வாறு சாகசம் செய்ததை, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலான நிலையில், இதுபோன்ற இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை வந்துள்ளது.