கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தமாக 8,486 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில், 376 பேருக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். 58 மாணவிகளுக்கு முனைவர் பட்டமும், 19 மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஆளுநர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.